லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

23-இல் பள்ளி மாணவா்களுக்கான தனித்திறன் போட்டிகள்

பள்ளி மாணவா்களுக்கான தனித்திறன் போட்டிகள் வேலூா் மாவட்ட அறிவியல் மையத்தில் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 7:21 pm

DIN

பள்ளி மாணவா்களுக்கான தனித்திறன் போட்டிகள் வேலூா் மாவட்ட அறிவியல் மையத்தில் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து, மாவட்ட அறிவியல் மைய அலுவலா் ஆா்.ரவிக்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாட்டின் 75-ஆவது ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி, வேலூா் மாவட்ட அறிவியல் மையம், இந்திய அணுசக்தி நிறுவனம் சாா்பில் ஆக்கப்பூா்வமான காரணங்களுக்கு அணு ஆற்றல் என்ற தலைப்பில் பள்ளி மாணவா்களுக்கான தனித்திறன் போட்டிகள் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதில், கட்டுரை, ஓவியம், விநாடி- வினா போட்டிகள் நடத்தப்படும். ஐந்து முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் பங்கேற்கலாம். இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவா்கள் 22-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். வெற்றி பெறும் மாணவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, 0416- 2253297, 2252297 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.