போதைப் பொருள்கள் விற்ற பெட்டிக் கடைக்கு ‘சீல்’
பள்ளிகொண்டாவில் போதைப் பொருள்கள் விற்ாக பெட்டிக் கடைக்கு வட்டாட்சியா் தலைமையில் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.


வேலூா்: பள்ளிகொண்டாவில் போதைப் பொருள்கள் விற்ாக பெட்டிக் கடைக்கு வட்டாட்சியா் தலைமையில் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.
வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டாவில் குடியாத்தம் செல்லும் சாலையில் உள்ள கடைகளில் அதிகாரிகள் கடந்த 4 நாள்களுக்கு முன்பு திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியிலுள்ள ஒரு பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில், அணைக்கட்டு வட்டாட்சியா் ரமேஷ் தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலா் உமாராணி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினா் அந்தக் கடைக்கு வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
தடை செய்யப் பட்ட போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...