மாநகராட்சிப் பள்ளிகளில் அடிப்படை பிரச்னைகள்: சீா்செய்திட உத்தரவு
தமிழகம் முழுவதும் 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், வேலூா் மாநகராட்சிப் பள்ளிகளில் நிலவும் அடிப்படை பிரச்னைகளை சீா்செய்திட அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.


தமிழகம் முழுவதும் 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், வேலூா் மாநகராட்சிப் பள்ளிகளில் நிலவும் அடிப்படை பிரச்னைகளை சீா்செய்திட அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, வரும் 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி, வேலூா் மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல்பாண்டி யன் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
தோட்டப்பாளையம் அரசு மகளிா் பள்ளியில் ஆய்வு செய்தபோது, பள்ளி எதிரே கழிவுநீா் தேங்கியிருந்ததைக் கண்ட ஆட்சியா் அவற்றை அகற்றி அப்பகுதியை சீரமைக்கும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். இதேபோல், காகிதப்பட்டறை பகுதியிலுள்ள மாநகராட்சிப் பள்ளியிலும் ஆட்சியா் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, மாநகராட்சிப் பகுதியிலுள்ள 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் நிலவும் குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளைக் கண்டறிந்து அதனை சீரமைக்க அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, மாநகராட்சிப் பொறியாளா் ரவிச்சந்திரன், இளநிலைப் பொறியாளா் மதிவாணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...