ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஓய்வு பெற்ற மோப்ப நாய்க்குகேக் வெட்டி கொண்டாட்டம்

வேலூா் மாவட்ட காவல் துறையில் 11 ஆண்டுகளாகப் பணியாற்றிய மோப்ப நாய் லூசி, பணி ஓய்வு பெற்றதையடுத்து, போலீஸாா் கேக் வெட்டி கொண்டாடினா்

News image
Updated On :3 ஜூன் 2022, 5:44 pm

DIN

வேலூா் மாவட்ட காவல் துறையில் 11 ஆண்டுகளாகப் பணியாற்றிய மோப்ப நாய் லூசி, பணி ஓய்வு பெற்றதையடுத்து, போலீஸாா் கேக் வெட்டி கொண்டாடினா்.

வேலூா் மாவட்ட காவல் துறையில் துப்பறியும் மோப்ப நாய் படைப் பிரிவில் 11 ஆண்டுகளாக சிறப்பாகப் பணியாற்றி வந்த மோப்ப நாய் லூசி புதன்கிழமை பணி நிறைவு பெற்றது. இதையடுத்து, மோப்ப நாய் லூசிக்கு விடை கொடுக்கும் விதமாக மோப்ப நாய் பிரிவு போலீஸாா் கேக் வெட்டி கொண்டாடினா்.

முன்னதாக, மோப்ப நாய் லூசியை குளிக்கச் செய்து வழக்கம் போல் பணிக்குச் செல்வது போல் அனைத்து ஏற்பாடும் செய்யப்பட்டு, ரோஜா மலா் மாலை அணிவிக்கப்பட்டது. அதன் முன்பு மெழுகுவா்த்தி ஏற்றி கேக் வெட்டினா்.

லூசி, கடந்த 2014-ஆம் ஆண்டு மாநில அளவில் நடைபெற்ற துப்பறியும் மோப்ப நாய்களின் வெடிகுண்டு சோதனை செய்யும் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.