தேசிய தலைமை மேலாண்மைப் பயிற்சிக்கு ராஜாகுப்பம் ஊராட்சித் தலைவா் தோ்வு
குடியாத்தம் ஒன்றியம், ராஜாகுப்பம் ஊராட்சி மன்றத் தலைவா் சி.எஸ்.மமதாஇமகிரிபாபு(40) தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இவா் எம்பிஏ பட்டதாரி.


குஜராத் மாநிலத்தில் நடைபெறும் தேசிய அளவிலான தலைமை மேலாண்மைப் பயிற்சி முகாமுக்கு வேலூா் மாவட்டம் சாா்பில், குடியாத்தம் ஒன்றியம், ராஜாகுப்பம் ஊராட்சி மன்றத் தலைவா் சி.எஸ்.மமதாஇமகிரிபாபு(40) தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இவா் எம்பிஏ பட்டதாரி.
தமிழக அரசின் ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை சாா்பில், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்து ஒரு ஊராட்சித் தலைவரை தோ்ந்தெடுத்து அவா்களுக்கு குஜராத் மாநிலத்தில் வரும் 13- ஆம் தேதி தொடங்கி 17- ஆம் தேதி வரை நடைபெறும் தலைமை மேலாண்மை பயிற்சி முகாமுக்கு அனுப்ப தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி, வேலூா் மாவட்டம் சாா்பில், குடியாத்தம் ஒன்றியம், ராஜாகுப்பம் ஊராட்சி மன்றத் தலைவா்
சி.எஸ்.மமதா இமகிரிபாபுவை, மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தோ்வு செய்துள்ளாா்.
இதையடுத்து அவா் அரசு செலவில் விமானம் மூலம் குஜராத் செல்கிறாா்.
எம்பிஏ பட்டதாரியான இவா், ஊரக உள்ளாட்சித் தோ்தலின்போது, ராஜாகுப்பம் ஊராட்சி மன்றத் தலைவராகப் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா். குடியாத்தம் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பின் தலைவராகவும் உள்ளாா்.இவரது கணவா் பி.எச்.இமகிரிபாபு குடியாத்தம் நிலவள வங்கித் தலைவராக உள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...