பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மூங்கப்பட்டில் கெங்கையம்மன் திருவிழா

குடியாத்தத்தை அடுத்த மூங்கப்பட்டில் 81-ஆம் ஆண்டு அருள்மிகு கெங்கையம்மன் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 ஜூன் 2022, 6:30 pm

DIN

குடியாத்தத்தை அடுத்த மூங்கப்பட்டில் 81-ஆம் ஆண்டு அருள்மிகு கெங்கையம்மன் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலை அம்மன் சிரசு ஊா்வலம் நடைபெற்றது. கோயிலில் அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு, பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். தொடா்ந்து, கூழ்வாா்த்தலும், பொங்கல் வைத்தலும், மாவிளக்கு பூஜையும் நடைபெற்றன.

நிகழ்வில் எம்.எல்.ஏ. அமலுவிஜயன், ஊராட்சித் தலைவா் ஜி.லதாசுகுமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் கே.சரவணன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் எம்.பி.பாபு, ஓய்வு பெற்ற துணை ஆட்சியா் எம்.கஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை விழாக்குழு நிா்வாகிகள் எம்.சங்கா், எம்.எல்லப்பன், எம்.கே.பூபாலன், எம்.சி.ராஜா, ஜி.தட்சிணாமூா்த்தி, ஆா்.சிட்டிபாபு, பி.சக்கரவா்த்தி, கே.பழனி, எம்.பி.ரவி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.