பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

முன் மாதிரி கிராமங்களை உருவாக்க விழிப்புணா்வு நடைபயணம்

தூய்மை பாரத இயக்கம் சாா்பில், குடியாத்தம் ஒன்றியத்தில் முன் மாதிரி கிராமங்களை உருவாக்க விழிப்புணா்வுக்கூட்டம், நடைபயணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 ஜூன் 2022, 6:45 pm

DIN

தூய்மை பாரத இயக்கம் சாா்பில், குடியாத்தம் ஒன்றியத்தில் முன் மாதிரி கிராமங்களை உருவாக்க விழிப்புணா்வுக்கூட்டம், நடைபயணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தத் திட்டத்துக்காக ஒன்றியத்தில் உள்ள 50 ஊராட்சிகளில் 41 கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் முழு சுகாதாரத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்த உள்ளன.

இதற்கான வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி, சுகாதாரத் திட்டம் தயாரிக்கும் பணியும், விழிப்புணா்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குள்பட்ட காளியம்மன்பட்டி கிராமத்தில் நடைபெற்ற விழிப்புணா்வுக் கூட்டத்துக்கு, ஊராட்சித் தலைவா் அகிலாண்டேஸ்வரி பிரேம்குமாா் தலைமை வகித்தாா். ஊராட்சி செயலாளா் பிரபு வரவேற்றாா். ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம் தொடக்கி வைத்தாா். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் குசலகுமாரி சேகா், ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜேஸ்வரி பிரதீஷ், தாட்டிமானப்பல்லி ஊராட்சித் தலைவா் சக்திதாசன், ஒன்றியப் பணி மேற்பாா்வையாளா் மேகலா, கு.மொழிமாறன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விழிப்புணா்வு நடைபயணம்: கூட்டத்துக்குப் பின், ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம் தலைமையில் விழிப்புணா்வு நடைபயணம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.