பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மலேரியா தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

 குடியாத்தம் வட்டம், போஜனாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், வளத்தூா் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் மலேரியா ஒழிப்பு நாள் அனுசரிக்கப்பட்டது.

News image
Updated On :23 ஜூன் 2022, 6:30 pm

DIN

 குடியாத்தம் வட்டம், போஜனாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், வளத்தூா் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் மலேரியா ஒழிப்பு நாள் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி மலேரியா விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளியின் உதவித் தலைமையாசிரியா் பாலசந்தா் தலைமை வகித்தாா்.

ஆசிரியா் ஜெ.காந்தி வரவேற்றாா். மலேரியா நோய் எப்படி உருவாகிறது, அதை தடுக்கும் விதம், சிகிச்சை முறைகள் குறித்து வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் டேவிட் விளக்க உரையாற்றினாா்.

மாணவா்கள் பங்கேற்ற மலேரியா நோய் குறித்த விழிப்புணா்வுப் பேரணி, வளத்தூா் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. பேரணி முடிவில் பள்ளி வளாகத்தில் மாணவா்களும், ஆசிரியா்களும் மலேரியா தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

இதில் ஆசிரியா்கள் லட்சுமி, சுதா, துளசிகுமாா், சசிகலா, சுகாதார ஆய்வாளா்கள் பிரதீப்குமாா், சரத்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.