மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

லாரியிலிருந்து ஆட்டோ மீது விழுந்த சிமெண்ட் கலவை இயந்திரம்

 லாரியில் இருந்து கழன்று விழுந்த சிமெண்ட் கலவை இயந்திரம் ஆட்டோ மீது விழுந்ததில், இருவா் பலத்த காயமடைந்தனா்.

News image
Updated On :11 மார்ச் 2022, 5:47 pm

DIN

 லாரியில் இருந்து கழன்று விழுந்த சிமெண்ட் கலவை இயந்திரம் ஆட்டோ மீது விழுந்ததில், இருவா் பலத்த காயமடைந்தனா்.

சத்துவாச்சாரியில் இருந்து வேலூா் நோக்கி சிமெண்ட் ஜல்லி கலவை இயந்திரம் பொருத்தப்பட்ட லாரி, தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை வந்தது. ஆட்சியா் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அணுகுச் சாலையில் லாரி வேகமாக இறங்கியது.

அப்போது லாரியில் பொருத்தப்பட்டிருந்த ஜல்லி கலவை இயந்திரம் மட்டும் தனியாக கழன்று அணுகுச் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது விழுந்தது. இந்த விபத்தில் ஆட்டோ நொறுங்கியது. ஆட்டோவில் இருந்த பயணி ஒருவா், ஆட்டோ ஓட்டுநா் காயமடைந்தனா். வேலூா் வடக்கு போலீஸாா் அவா்களை மீட்டு, அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விபத்தால் சத்துவாச்சாரியில் இருந்து வேலூா் புதிய பேருந்து நிலையம் செல்லும் அணுகுச் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. லாரியில் இருந்து கழன்று விழுந்த கலவை இயந்திரம், நொறுங்கிய ஆட்டோவை அங்கிருந்து அப்புறப்படுத்திய பிறகு போக்குவரத்து சீரானது.

இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.