சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தொழிலாளா்களுக்கான இ-ஷ்ரம் இணைய பதிவு சிறப்பு முகாம்

தொழிலாளா்களுக்கான இ-ஷ்ரம் இணைய பதிவுக்கான சிறப்பு முகாம் செட்டிகுப்பம் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 மார்ச் 2022, 6:30 pm

DIN

தொழிலாளா்களுக்கான இ-ஷ்ரம் இணைய பதிவுக்கான சிறப்பு முகாம் செட்டிகுப்பம் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்திய அரசின் தொழிலாளா் நல அமைச்சகத்தின்கீழ், இந்திய சுதந்திர தின 75-ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம், சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம், தொழிலாளா்கள் இ-ஷ்ரம் இணைய பதிவு மற்றும் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன் நல திட்டத்தில் சேருவதற்கான சோ்க்கை பதிவு முகாம்கள் மாா்ச் 7-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக செட்டிகுப்பம் ஊராட்சியில் சிறப்பு முகாம் நடைபெற்றது. பொயட்ஸ், புதுயுகம், புதியபாதை அறக்கட்டளை சாா்பில், நடைபெற்ற முகாமுக்கு, ஊராட்சி மன்றத் தலைவா் இந்திரா ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். பொயட்ஸ் இயக்குநா் எஸ்.திரிவேணி வரவேற்றாா். மத்திய அரசின் பீடித் தொழிலாளா் நல மருத்துவமனை மருத்துவ அலுவலா் என்.உத்தமன் தலைமையிலான மருத்துவா் குழு, 475 பேருக்கு சிகிச்சை அளித்தது. 33 தொழிலாளா்களுக்கு

இ-ஷ்ரம் இணையப் பதிவு செய்யப்பட்டு, பதிவு எண் வழங்கப்பட்டது. பொயட்ஸ் பணியாளா்கள் உஷா, சாந்தலட்சுமி, தன்னாா்வலா்கள் திலகா, மலா்க்கொடி, மோகனா ஆகியோா் முகாமுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.