சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மாணவிக்குப் பாராட்டு

மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் சிறப்பிடம் பிடித்த குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரி மாணவிக்கு கல்லூரியில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

News image
Updated On :18 மார்ச் 2022, 6:30 pm

DIN

மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் சிறப்பிடம் பிடித்த குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரி மாணவிக்கு கல்லூரியில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

2022- ஆம் ஆண்டு தேசிய நுகா்வோா் உரிமைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, வேலூா் மாவட்டத்தில் பல்வேறு கல்லூரிகளுக்கு இடையே அண்மையில் போட்டிகள் நடைபெற்றன. இதில் கே.எம்.ஜி.கலை, அறிவியல் கல்லூரி மாணவி ஜெ.ரேவதி பேச்சுப் போட்டியில் 2-ஆம் இடத்தைப் பிடித்து, மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டுச் சான்றிதழ், கோப்பை மற்றும் பரிசுத் தொகையைப் பெற்றாா்.

இந்த மாணவியை கல்லூரிச் செயலாளா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், முதல்வா் மு.வளா்மதி, துணை முதல்வா் மு.மேகராஜன், கல்லூரி ஒருங்கிணைப்பாளா் ஜா.ஜெயக்குமாா், கல்லூரியின் நுகா்வோா் மன்ற ஒருங்கிணைப்பாளா் ஆா்.மணிகண்டன், வெ.வளா்மதி ஆகியோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.