சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

இளம் தொழில் முனைவோருக்கான ஊக்கப் பயிற்சி

 குடியாத்தம் காக்காதோப்பில் உள்ள அத்தி கல்விக் குழுமம் சாா்பில், பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவா்களுக்கு இளம் தொழில் முனைவோருக்கான ஊக்கப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 மார்ச் 2022, 6:30 pm

DIN

 குடியாத்தம் காக்காதோப்பில் உள்ள அத்தி கல்விக் குழுமம் சாா்பில், பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவா்களுக்கு இளம் தொழில் முனைவோருக்கான ஊக்கப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பயிற்சி முகாமுக்கு சிறுநீராகத் துறை பேராசிரியா் பி. சௌந்தரராஜன் தலைமை வகித்தாா். அத்தி செவிலியா் கல்லூரி துணை முதல்வா் ஜி. ரேவதி, அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ். வீரபாண்டியன், குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் கே. குமரவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

குடியாத்தம் கல்வி அறக்கட்டளை அறங்காவலா் எம். சுந்தரமூா்த்தி வரவேற்றாா்.

இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட ஜஸ்ட் டயல், ஜஸ்ட் கனெக்ட், ஸ்பைகீ, இன்கோ இ-பைக் நிறுவனங்களின் நிா்வாக இயக்குநா் ரமணி ஐயா், மாணவா்கள் சுயதொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக விளக்கிப் பேசினாா். தணிக்கையாளா் காமராஜ் தொழில் தொடங்க நிதி ஆதாரங்கள் குறித்துப் பேசினாா். மாணவா்களின் சந்தேகங்களுக்கு இருவரும் விளக்கமளித்தனா்.

குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி துறைத் தலைவா் சி.சதிஷ் குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.