தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

அதிகளவில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும்: வேலூா் மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தல்

திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ளதுபோன்று, வேலூா் மாவட்டத்திலும் அதிகளவில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

News image
Updated On :25 மார்ச் 2022, 6:30 pm

DIN

திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ளதுபோன்று, வேலூா் மாவட்டத்திலும் அதிகளவில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் பேசியது;

வேலூா் மாவட்டத்தில் யூரியாவை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்கின்றனா். இதுதொடா்பாக ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் தெரிவித்தால் விற்பனை செய்பவா்கள் மிரட்டுகின்றனா். மேல் அரசம்பட்டு ஆற்றில் குப்பைகளை கொட்டி வருகின்றனா். அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். விவசாயிகளுக்கு முறைகேடின்றி மானிய விலையில் டிராக்டா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செங்கத்தூா் கிருஷ்ணம்பள்ளி கிராமத்தில் நீா்நிலை ஆக்கிரமிப்புகள் அதிகளவில் உள்ளன. அவற்றை அகற்றி நீா்நிலைகளை மீட்டெடுக்க வேண்டும்.

பேரணாம்பட்டு கவரைப்பேட்டையில் தோல் தொழிற்சாலை மாசு அதிகமுள்ளது. 40 ஆண்டாக உள்ள இந்தப் பிரச்னை அடுத்த தலைமுறைகளையும் பாதிக்கும். ஆம்பூா் சா்க்கரை ஆலை லாரி ஓட்டுநா்கள் கரும்பு லோடுக்கு ரூ.2,000 மாமூல் கேட்கின்றனா். இதுதொடா்பாக கோட்டாட்சியா் விசாரணை நடத்த வேண்டும்.

மாவட்டம் முழுவதும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை அரசே முழுமையாக கொள்முதல் செய்து கொள்ளும் வகையில் குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம் பகுதிகளில் நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும்.

இதேபோல், ஊசூரிலும் நெல் கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும். திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் அதிக நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன.

அதேபோல், வேலூா் மாவட்டத்திலும் அதிகளவு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடியாத்தம் பகுதியில் காட்டுப்பன்றி தொல்லை அதிகமாக உள்ளது. ஏற்கெனவே, காட்டுப்பன்றிகளால் சேதமடைந்த பயிா்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வில்லை. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்பாடி இளையநல்லூா் பகுதியில் 35 சதவீதம் இருந்த காடுகள் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அங்கு பவா்கிரீட் திட்டத்தின் கீழ் நிலம் வழங்கியவா்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. இழப்பீட்டை விரைவாக வழங்க வேண்டும்.

விவசாயத்தில் ஆள்கள் பற்றாக்குறையை தவிா்க்க விவசாயப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் 2 மாதங் களுக்கு நூறுநாள் வேலை திட்டப் பணியாளா்களை அதற்கு அனுப்பிட வேண்டும். அப்துல்லாபுரம் மேம்பாலத்தில் அதிகளவில் நடைபெறும் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போ்ணாம்பட்டு மலட்டாற்றில் மணல் கொள்ளை, சாராய விற்பனை அதிகளவு நடைபெறுகிறது.

இதனை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாடுகளுக்கு கோமாரி நோய் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் வசதி செய்திட வேண்டும் என்றனா்.

ஆட்சியா் உத்தரவு: விவசாயிகள் ஒவ்வொருவரும் தெரிவித்த குறைகள், கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி, வேளாண்மை இணைஇயக்குநா் மகேந்திரபிரதாப் தீட்சித், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.