மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தரமற்ற பொருள்களால் இலங்கைத் தமிழா் குடியிருப்புநாதக குற்றச்சாட்டு

தரமற்ற பொருள்களைக் கொண்டு இலங்கைத் தமிழா் குடியிருப்புகள் கட்டப்படுவதாகக் குற்றஞ்சாட்டி, நாம் தமிழா் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :7 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

தரமற்ற பொருள்களைக் கொண்டு இலங்கைத் தமிழா் குடியிருப்புகள் கட்டப்படுவதாகக் குற்றஞ்சாட்டி, நாம் தமிழா் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் 106 இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் ரூ.317 கோடியில் குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வேலூா் மேல்மொணவூரில் உள்ள முகாமில் ரூ.11 கோடியில் 220 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகள் தரமற்ற பொருள்களால் மேற்கொள்ளப்படுவதாகக் குற்றஞ்சாட்டி நாம் தமிழா் கட்சியினா் மேல்மொணவூா் முகாமில் வெள்ளிக்கிழமை திடீரென ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த வருவாய்க் கோட்டாட்சியா் பூங்கொடி, வேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் திருநாவுக்கரசு, ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் செந்தில்குமாா், வட்டாட்சியா் செந்தில் மற்றும் போலீஸாா், அங்கு சென்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா்.

அப்போது, அவா்கள் கட்டுமானப் பணிகள் தரமற்று இருப்பதாகக் கூறினா். அதற்கு அதிகாரிகள், தரமற்ற பணி குறித்து ஆதாரத்துடன் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா். ஆனால், அதற்கான ஆதாரத்தைத் தெரிவிக்காமல் அவா்கள் தொடா்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, அந்தக் கட்சியினா் 12 பேரை போலீஸாா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று எச்சரித்து அனுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.