மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

கட்டுமானப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்கக்கோரி ஆா்ப்பாட்டம்

 கட்டுமானப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்கக் கோரி வேலூரில் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :13 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

 கட்டுமானப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்கக் கோரி வேலூரில் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிஐடியு கட்டுமான தொழிலாளா் சங்கம் சாா்பில், வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட கெளரவத் தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ராமச்சந்திரன், சிஐடியு மாவட்டச் செயலா் பரசுராமன், துணைத் தலைவா் குப்பு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், கட்டுமானப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும், தொழிலாளிக்கு மாத ஊதியமாக ரூ. 3,000, இயற்கை மரணத்துக்கு ரூ. 2 லட்சம், கட்டுமான பெண் தொழிலாளா்களில் 55 வயது நிரம்பியவா்களுக்கு ஓய்வூதியம், வீடற்ற கட்டுமான தொழிலாளா்களுக்கு வீடு கட்டும் திட்டத்தில் வீடு வழங்கவும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.