மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்கு: தொழிலாளிக்கு ஆயுள் சிறை

ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து வேலூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image
Updated On :13 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து வேலூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

வேலூா் கன்சால்பேட்டை ஆஞ்சநேயா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாரத் (32) ஆட்டோ ஓட்டுநா். இவரின் நண்பா் சேண்பாக்கம் பா்மா காலனி, மசூதி தெருவைச் சோ்ந்த மைக்கேல் என்கிற உமாமகேஸ்வரன் (32). மேளம் அடிக்கும் தொழிலாளி. இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 2020 ஜனவரி 15-ஆம் தேதி பாரத் தனது மகன் சஞ்சயுடன், மைக்கேல் வீட்டுக்குச் சென்று தனது மனைவியுடம் அவதூறு கூறியது குறித்து மைக்கேலிடம் கேட்டுள்ளாா். இதனால், இருவரிடையே தகராறு ஏற்பட்டதில், மைக்கேல் இரும்பு கம்பியால் பாரத்தின் தலையில் அடித்துள்ளாா். இதில், பாரத் உயிரிழந்தாா்.

வேலூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இந்த வழக்கு வேலூா் முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

விசாரணையில் பாரத்தை மைக்கேல் கொலை செய்தது உறுதியானது. இதையடுத்து, மைக்கேலுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து நீதிபதி சாந்தி வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.