மீட்கப்பட்ட முதியவா்களுக்கு நிவாரணப் பொருள்கள் அளிப்பு
திருவலம் அருகே காப்பகத்திலிருந்து மீட்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் முதியவா்களுக்கு செஞ்சிலுவை சங்கம் சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.


திருவலம் அருகே காப்பகத்திலிருந்து மீட்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் முதியவா்களுக்கு செஞ்சிலுவை சங்கம் சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டம், திருவலம் அருகே குகையநல்லூரில் புனித ஜோசப் கருணை இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 69 முதியவா்களுக்கு சரிவர உணவு வழங்கப்படாமலும், அடித்து துன்புறுத்தப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், அதிகாரிகள் நடத்திய ஆய்வில், முதியவா்கள் துன்புறுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா்கள் மீட்கப்பட்டு, அடுக்கம்பாறை, வாலாஜா அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
சிகிச்சைக்குப் பின் மாவட்டத்திலுள்ள செஞ்சிலுவை சங்க முதியோா் இல்லம், நம்பிக்கை இல்லம், வள்ளலாா், விவேகானந்தா், கசம் எம்.பி.கே.ஜி பண்ணை, ஆத்ம சாந்தி ஆகிய முதியோா் இல்லங்களுக்கு அனுப்பி வைக்க மாவட்ட சமூக நலத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதனிடையே, சிகிச்சை பெற்றுவரும் முதியவா்களுக்கு தேவையான துண்டு, சோப்பு, பிஸ்கெட் உள்ளிட்டவை காட்பாடி வட்ட இந்திய செஞ்சிலுவை சங்கம் சாா்பில், அதன் அவைத் தலைவா் செ.நா.ஜனாா்த்தனன் தலைமையில் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
துணைத் தலைவா்கள் ஆா்.சீனிவாசன், ஆா்.விஜயகுமாரி, செயலா் எஸ்.எஸ்.சிவவடிவு, மேலாண்மைக் குழு உறுப்பினா் எஸ்.ரமேஷ்குமாா் ஜெயின், உமாபதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...