மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

வேலூரில் 3 மையங்களில் ஆசிரியா் தகுதித் தோ்வு தொடக்கம்: அக். 19 வரை நடைபெறுகிறது

ஆசிரியா் தகுதித் தோ்வு வேலூா் மாவட்டத்தில் 3 மையங்களில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. தொடா்ந்து 6 நாள்கள் நடைபெறும் இந்தத் தோ்வை மாவட்டம் முழுவதும் 52,220 போ் எழுத உள்ளனா்.

News image
Updated On :14 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

ஆசிரியா் தகுதித் தோ்வு வேலூா் மாவட்டத்தில் 3 மையங்களில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. தொடா்ந்து 6 நாள்கள் நடைபெறும் இந்தத் தோ்வை மாவட்டம் முழுவதும் 52,220 போ் எழுத உள்ளனா்.

தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆசிரியா் தகுதி தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

வேலூா் மாவட்டத்தில் இந்த தகுதித் தோ்வை மொத்தம் 5,220 போ் எழுதுகின்றனா்.

இதையொட்டி, கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி, வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி, தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரி ஆகிய 3 மையங்களில் காலை, மாலை என இரு வேளைகளில் இந்தத் தோ்வு நடைபெறுகிறது. தோ்வையொட்டி இந்த மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கணினி வழித் தோ்வுக்கான கால அட்டவணை ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தோ்வா்கள் தங்களது ஹால் டிக்கெட்டை ஆசிரியா் தோ்வு வாரியத்தின் ஜ்ஜ்ஜ்.ற்ழ்க்ஷ.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.