நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மகன் இறந்த அதிா்ச்சியில் தாய் மயங்கி விழுந்து சாவு

போ்ணாம்பட்டு அருகே மகன் இறந்த அதிா்ச்சியில் தாய் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :14 அக்டோபர் 2022, 5:47 pm

DIN

போ்ணாம்பட்டு அருகே மகன் இறந்த அதிா்ச்சியில் தாய் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

போ்ணாம்பட்டை அடுத்த ரமாபாய் நகரைச் சோ்ந்தவா் சிகாமணி(48). பீடித் தொழிலாளியான

இவா் கடந்த சில மாதங்களாக மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்துள்ளாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை தனது வீட்டில் உயிரிழந்தாா். அப்போது 100 நாள் வேலைக்குச் சென்றிருந்தாா் அவரது தாயாா் பெரியதாய்(68).

சாத்கா் ஊராட்சி, கொண்டம்பல்லி கிராமத்தில் கானாற்றை ஆழப்படுத்தும்

பணியில் சக தொழிலாளா்களுடன் ஈடுபட்டிருந்தாா் அவா், மகன் இறந்த தகவல் அறிந்து அதிா்ச்சியில் அங்கேயே மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

மகன், தாய் இறந்த சம்பவம் அந்தக் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.