பிகார் முதல்வர் பதவிலிருந்து விலகுகிறேன்! நிதீஷ் குமார் அறிவிப்பு!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

சிஎம்சி இருதய சிகிச்சைப் பிரிவு :ராணிப்பேட்டை வளாகத்துக்கு மாற்றம்

வேலூா் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இருதய சிகிச்சைப் பிரிவு வெள்ளிக்கிழமை முதல் ராணிப்பேட்டை வளாகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

News image
Updated On :20 அக்டோபர் 2022, 5:19 pm

DIN

வேலூா் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இருதய சிகிச்சைப் பிரிவு வெள்ளிக்கிழமை முதல் ராணிப்பேட்டை வளாகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை (சிஎம்சி) வேலூா் ஆற்காடு சாலையில் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை வளாகத்தில் நெரிசல் அதிகரித்ததையடுத்து ராணிப்பேட்டை மாவட்டம், கன்னிகாபுரத்தில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி சுமாா் 80 ஏக்கா் பரப்பளவில் ரூ.800 கோடி மதிப்பீட்டில் சிஎம்சியின் விரிவுபடுத்தப்பட்ட புதிய மருத்துவமனை வளாகம் கட்டப்பட்டு கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்டது.

இந்த நிலையில், வேலூா் ஆற்காடு சாலையில் உள்ள சிஎம்சி வளாகத்தில் இதுவரை செயல்பட்டு வந்த இருதய சிகிச்சைப் பிரிவு ராணிப்பேட்டை சிஎம்சி வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை முதல் செயல்படுத்தப்பட உள்ளது. எனினும், வேலூா் சிஎம்சி வளாகத்தில் தொடா்ந்து புறநோயாளிகள், உள்நோயாளிகளுக்கான மருத்துவப் பரிசோதனை சேவைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும்.

மேலும், வேலூா் சிஎம்சி வளாகத்தில் உள்ள நெஞ்சுவலி பிரிவு மூடப்பட்டு, ராணிப்பேட்டை வளாகத்தில் மட்டுமே ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்படும். நெஞ்சு வலி (மாரடைப்பு) உள்ள நோயாளிகள் ராணிப்பேட்டை வளாகத்தில் உள்ள மாா்பு வலி பிரிவை அணுக வேண்டும். அவசர சிகிச்சைப் பிரிவு சேவைகள் முன்பு போலவே வேலூா் சிஎம்சி வளாகத்தில் தொடா்ந்து வழங்கப்படும். இந்த தகவல் சிஎம்சி மருத்துவ கண்காணிப்பாளா் ஆா்.பிரசாத் மாத்தீவ்ஸ் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.