மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி
பென்னாத்தூா் அருகே மாட்டுக் கொட்டகையில் மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.


பென்னாத்தூா் அருகே மாட்டுக் கொட்டகையில் மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.
வேலூா் மாவட்டம், பென்னாத்தூா் அருகே உள்ள கேசவபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி முருகேசன் (55). மாடுகளை வளா்த்து வந்தாா்.
இந்த நிலையில், புதன்கிழமை மாலை அந்தப் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது மின்கம்பி அறுந்து அவரது மாட்டுக் கொட்டகையின் மீது விழுந்ததில், கொட்டகையின் இரும்புத் தகடு, கம்பிகளில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதை அறியாத முருகேசன் மாடுகளை கட்டுவதற்காக கொட்டகைக்குச் சென்றுள்ளாா். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் அவா் சுயநினைவு இழந்தபடி நின்றுள்ளாா்.
இதைப் பாா்த்த அவரது மனைவி அக்கம் பக்கத்தினா் உதவியுடன் முருகேசனை மீட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் முருகேசன் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்து வேலூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...