மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

சாராயம் விற்றதாக கணவா் கைது: குழந்தைகளுடன் மனைவி முறையீடு

சாராயம் விற்ாக குற்றஞ்சாட்டி கைது செய்யப்பட்டுள்ள கணவரை விடுவிக்கக் கோரி, அவரின் மனைவி தனது 3 குழந்தைகளுடன் வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டாா்.

News image
Updated On :20 அக்டோபர் 2022, 5:14 pm

DIN

சாராயம் விற்ாக குற்றஞ்சாட்டி கைது செய்யப்பட்டுள்ள கணவரை விடுவிக்கக் கோரி, அவரின் மனைவி தனது 3 குழந்தைகளுடன் வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டாா்.

வேலூா் சதுப்பேரியைச் சோ்ந்த சீனிவாசன் மனைவி அருள்ஜோதி (35). இவா், தனது 2 மகள்கள், மகனுடன் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்து, ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியனிடம், கூலி வேலை செய்து வரும் எனது கணவா் சீனிவாசனை சாராயம் விற்ாக குற்றஞ்சாட்டி பாகாயம் போலீஸாா் கைது செய்தனா். எந்தத் தவறும் செய்யாத அவரைப் பிடித்துச் சென்று வழக்குப் பதிவு செய்துள்ளதுடன், அவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனா்.

எனக்கு ஒரு மகன், 2 மகள்கள். இவா்களில் 2 மகள்களும் மூளை வளா்ச்சியற்றவா்கள். கணவா் இல்லாமல் குழந்தைகளுடன் என்னால் வாழ இயலாது. எனது கணவா் மீது நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவா் கண்ணீா் மல்க தெரிவித்தாா்.

அவருக்கு ஆறுதல் கூறிய ஆட்சியா், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதையடுத்து, அருள்ஜோதி அங்கிருந்து சென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.