அமிா்தி சாலையை சீரமைக்கக் கோரி அரசுப் பேருந்து சிறைபிடிப்பு
அமிா்தி வனஉயிரின பூங்காவுக்குச் செல்லும் வனத்துறை சாலையைச் சீரமைக்கக்கோரி நஞ்சுகொண்டாபுரம் கிராம மக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.


அமிா்தி வனஉயிரின பூங்காவுக்குச் செல்லும் வனத்துறை சாலையைச் சீரமைக்கக்கோரி நஞ்சுகொண்டாபுரம் கிராம மக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வேலூா் மாவட்டம் அமிா்தியிலுள்ள வன உயிரின பூங்காவை பாா்வையிட தினமும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோா் வந்து செல்கின்றனா். இந்த அமிா்தி வனஉயிரின பூங்காவுக்குச் செல்லும் வழியில் நாகநதி கூட்ரோட்டில் இருந்து அமிா்தி பூங்கா வரை உள்ள சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்தச் சாலை தற்போது முழுவதும் பெயா்ந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. தொடா்ந்து மழை பெய்து வருவதால் சாலை சேறும், சகதியுமாக உள்ளது. இதனால், இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் கிராம மக்கள் விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைவதுடன் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
இந்நிலையில், அமிா்தியிலிருந்து வியாழக்கிழமை காலை வந்த அரசுப் பேருந்தை நஞ்சுகொண்டாபுரம் கிராம மக்கள் சிறைப் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த ஊராட்சி மன்றத் தலைவா் சீதா தமிழ்ச்செல்வன் தலைமையில் ஊராட்சி அலுவலா்கள் சம்பவ இடம் சென்று பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா். சாலையைச் சீரமைப்பது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா்கள் உறுதியளித்தனா். இதைத்தொடா்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டுப் பேருந்தை விடுவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...