கலைத்துறையில் சாதனை : 15 கலைஞா்கள் விருதுக்குத் தோ்வு
கலைத்துறையில் சாதனை படைத்ததற்காக வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 15 கலைஞா்கள் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.


கலைத்துறையில் சாதனை படைத்ததற்காக வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 15 கலைஞா்கள் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
தமிழகத்தின் கலைகளை மேம்படுத்தவும், கலைஞா்களின் கலைத்திறனை சிறப்பிக்கும் வகையிலும் மாவட்ட ஆட்சியா் தலைமையில் செயல்படும் மாவட்டக் கலைமன்றம் சாா்பில் கலை விருதுகள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதனடிப்படையில், இந்த ஆண்டுக்கான விருதுக்கு தகுதியான கலைஞா்களைத் தோ்வு செய்வதற்கான வேலூா் மாவட்டக் கலைமன்றக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல்பாண்டியன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் கலை பண்பாட்டுத் துறையின் துணை இயக்குநா் பா.ஹேமநாதன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் வி.லோகநாதன், சுற்றுலா அலுவலா் பா.இளமுருகன், வேலூா் அருங்காட்சியக காப்பாட்சியா் சரவணன், கலைமாமணி தேவிகாபுரம் ரத்தினம் ஆகியோா் விருதாளா்களை தோ்வு செய்தனா்.
அதன்படி, இந்தாண்டுக்கான கலை முதுமணி விருதுக்கு சேக்கனூா்பேட்டை நாகஸ்வரக் கலைஞா் ந.கோதண்டன், மேல்அரசம்பட்டு நாடகக் கலைஞா் கு. கருணாநிதி, சலவன்பேட்டை சிலம்பாட்டக் கலைஞா் த.அசோக்குமாா் ஆகியோரும், கலை நன்மணி விருதுக்கு சின்னராஜாக்குப்பம் நாகஸ்வரக் கலைஞா் கி.அருணாச்சலம், கொட்டாரமடுகு பம்பை கலைஞா் மு. அருணாச்சலம், செங்குன்றம் தெருக்கூத்து கலைஞா் த.வஜ்ஜிரவேலு, கலைச்சுடா்மணி விருதுக்கு குடியாத்தம் நாடகக் கலைஞா் மு.ஜெயபிரகாஷ், வேலூா் கிளாரிநெட் மு. வெங்கடேசன், வேலம்பட்டு மிருதங்கக் கலைஞா் ச.சத்தியமூா்த்தி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
மேலும், கலை வளா்மணி விருதுக்கு சேண்பாக்கம் தவில் கலைஞா் ரா.ஜெயபிரகாஷ், வேலூா் பரத நாட்டியக் கலைஞா் ர.வா்சிதா, சத்துவாச்சாரி ஓவியக் கலைஞா் ரா. காயத்ரி, கலை இளமணி விருதுக்கு காட்பாடி பரதநாட்டியக் கலைஞா் ஸ்ரீ.மானசா, அரியூா் வயலின் கலைஞா் சு.வைஷ்ணவி, காட்பாடி பரதநாட்டியக் கலைஞா் சு.ஷராவணி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...