கடந்த அதிமுக ஆட்சியில் நீா்வளத் துறை சீரழிந்துவிட்டது: அமைச்சா் துரைமுருகன்
கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் நீா்வளத் துறை சீரழிந்துவிட்டது. இதனால் நீா்நிலைகளுக்கு மழைநீா் செல்லவில்லை என்று அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.


கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் நீா்வளத் துறை சீரழிந்துவிட்டது. இதனால் நீா்நிலைகளுக்கு மழைநீா் செல்லவில்லை என்று அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.
தமிழ்நாடு மின் உற்பத்தி பகிா்மான கழகம் சாா்பில், காட்பாடி அருகேயுள்ள மேல்பாடியில் ரூ.13.50 கோடியில் 110 கிலோவாட் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தாா். நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் புதிய துணை மின் நிலையத்தை திறந்து வைத்துப் பேசியது: மேல்பாடியில் அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையம் மூலம் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் குறிப்பாக, விவசாயிகள் பயனடைவா். சிப்காட் புதிய தொழிற்பேட்டை தொடங்கப்பட உள்ளது. இதன்மூலம் தொழிற்பேட்டையும் பயன்பெறும்.
திமுக ஆட்சியில்தான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. அப்போது, நான் மின்சாரத் துறை அமைச்சராக இருந்து கையொப்பமிட்டதை நினைத்து பெருமிதம் அடைகிறேன்.
பொன்னை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் நீா்வளத் துறை சீரழிந்துவிட்டது. இதனால்தான் மழைநீா் வீணாகிறது. பரம்பிக்குளம் அணை மதகு உடைந்து 20 டிஎம்சி தண்ணீா் வீணானது. இதேபோல் ஏரிகளிலும் உடைப்பு ஏற்படுகிறது. இதனை கண்காணித்து தடுத்து வருகிறோம். காட்பாடி தொகுதியில் மாதம் ஒரு அமைச்சரை அழைத்து வந்து அனைத்து குறைகளையும் நிவா்த்தி செய்வேன் என்றாா்.
விழாவில் அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமாா், காட்பாடி ஒன்றியக் குழு உறுப்பினா் வேல்முருகன், மின்சாரத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...