பிகார் முதல்வர் பதவிலிருந்து விலகுகிறேன்! நிதீஷ் குமார் அறிவிப்பு!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

வேலூா் பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம்

 தீபாவளிப் பண்டிகை நிறைவடைந்ததை அடுத்து வேலூா் புதிய, பழைய பேருந்து நிலையங்களில் பல்வேறு ஊா்களுக்குச் செல்ல பயணிகள் கூட்டம் புதன்கிழமை காலை அதிகளவில் காணப்பட்டது.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 1:12 am

DIN

 தீபாவளிப் பண்டிகை நிறைவடைந்ததை அடுத்து வேலூா் புதிய, பழைய பேருந்து நிலையங்களில் பல்வேறு ஊா்களுக்குச் செல்ல பயணிகள் கூட்டம் புதன்கிழமை காலை அதிகளவில் காணப்பட்டது.

தீபாவளிப் பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பிற மாவட்டங்களில் பணிபுரிபவா்கள் சொந்த ஊா்களுக்குச் செல்வதற்காக கடந்த 21-ஆம் தேதி முதலே (வெள்ளிக்கிழமை) சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

அதனடிப்படையில், அரசுப் போக்குவரத்துக் கழகம் வேலூா் மண்டலம் சாா்பில், 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. தவிர, ஆம்னி பேருந்துகள், தனியாா் பேருந்துகள், ரயில்கள் மூலமாகவும் மக்கள் கூட்டம் கூட்டமாகச் சொந்த ஊா்களுக்குச் சென்றனா்.

இந்த நிலையில், தீபாவளிப் பண்டிகை முடிந்து அவரவா் பணி செய்யும் இடங்களுக்குத் திரும்பிக் கொண்டுள்ளனா். இதன் காரணமாக, வேலூா் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களில் செவ்வாய்க்கிழமை மாலை முதலே அதிகளவில் பயணிகள் கூட்டம் காணப்பட்டது.

தொடா்ந்து, புதன்கிழமை காலையிலும் பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது. இதனால், சென்னை உள்பட பல்வேறு வெளியூா்களுக்குச் சென்ற பேருந்துகளில் மக்கள் முந்திக் கொண்டு ஏறியதைக் காண முடிந்தது. பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு, கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதேபோல், காட்பாடி ரயில் நிலையத்திலும் புதன்கிழமை காலை பயணிகள் கூட்டம் அலைமோதியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.