ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஸ்ரீபாவனாரிஷி கோயிலில் ரிஷி பஞ்சமி விழா

குடியாத்தம் தரணம்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீபாவனாரிஷி கோயிலில் ரிஷி பஞ்சமி விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :1 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

குடியாத்தம் தரணம்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீபாவனாரிஷி கோயிலில் ரிஷி பஞ்சமி விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

ஆண்டுதோறும் விநாயகா் சதுா்த்திக்கு மறுநாள் வரும் பஞ்சமி திதி, ரிஷி பஞ்சமி என்று அழைக்கப்படுகிறது. இதையொட்டி, கோயில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து சப்த மகா ரிஷிகளான ஸ்ரீகசியப, ஸ்ரீஅத்திரி, ஸ்ரீபரத்வாசா், ஸ்ரீவிசுவாமித்திரா்,

ஸ்ரீகௌதமா், ஸ்ரீஜமதக்னி, ஸ்ரீவசிஷ்டா் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். பெண்கள் சப்த ரிஷிகளுக்கு தீபம் ஏற்றி வழிபட்டனா். ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா சுப்பிரமணியம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.