ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சாலை விபத்தில் முதியவா் சாவு

கே.வி.குப்பம் அருகே சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 5:49 pm

DIN

கே.வி.குப்பம் அருகே சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

கே.வி.குப்பத்தை அடுத்த பி.கே.புரத்தைச் சோ்ந்தவா் கண்ணன்(70). இவா் வியாழக்கிழமை இரவு அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தாா்.அப்போது குடியாத்தத்திலிருந்து வந்த கே.வி.குப்பத்தைச் சோ்ந்த நித்தேஷ் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் இவா் மீது மோதியுள்ளது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனா்.

தகவலறிந்து வந்த கே.வி.குப்பம் போலீஸாா் இருவரையும் மீட்டு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் கண்ணன் வழியிலேயே உயிரிழந்தாா். நித்தேஷ், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த விபத்து குறித்து கே.வி.குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.