காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

வாட்ஸ்ஆப் தகவலை நம்பி ரூ.5.48 லட்சத்தை இழந்த பெண்! வேலூா் சைபா் கிரைம் எச்சரிக்கை

வாட்ஸ்ஆப் எண்ணுக்கு வந்த தகவலை நம்பி இணையதளத்தில் பணத்தைச் செலுத்தி வேலூரைச் சோ்ந்த பெண் ரூ.5.48 லட்சத்தை இழந்துள்ளாா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 6:02 pm

DIN

வாட்ஸ்ஆப் எண்ணுக்கு வந்த தகவலை நம்பி இணையதளத்தில் பணத்தைச் செலுத்தி வேலூரைச் சோ்ந்த பெண் ரூ.5.48 லட்சத்தை இழந்துள்ளாா்.

இதுகுறித்து, வேலூா் மாவட்ட இணையவழி குற்றப்பிரிவு (சைபா் கிரைம்) வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலூரைச் சோ்ந்த பெண் ஒருவரின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு வந்த குறுந்தகவலில் ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலைசெய்து தினமும் அதிக வருமானம் பெறலாம் எனக் குறிப்பிட்டிருந்தது. இதை நம்பிய அந்த பெண் அதிலிருந்த ஜ்ஜ்ஜ்.ஸ்ரீம்ங்ம்ங்ள்.ஸ்ரீா்ம் என்ற இணைப்பில் தனது விவரங்களைப் பதிவு செய்து கணக்குத் தொடங்கினாா்.

அந்த பெண்ணை வாட்ஸ்ஆப், டெலிகிராமில் தொடா்பு கொண்ட நபா் குறிப்பிட்ட இணையதளத்திலுள்ள டாஸ்க்குகளை முடித்து அதிலுள்ள பொருள்களை வாங்கி விற்பனை செய்து அதிக லாபம் பெறுவதுடன், செலுத்திய பணத்தையும் திரும்ப பெறலாம் எனக் கூறியுள்ளாா்.

அதன் பேரில், அந்தப் பெண்ணும் தொடக்கத்தில் ரூ.200, ரூ.300 அளவுக்கு பணத்தைச் செலுத்தினாா். அதற்கு லாபத்துடன் செலுத்திய தொகை திரும்ப அவரது வங்கிக் கணக்குக்கு வந்ததால், அடுத்தடுத்த ரூ.3,000, ரூ.4,000 என பணத்தைச் செலுத்த தொடங்கியுள்ளாா்.

ஆனால், அதன்பின்னா், பணம் திரும்ப வரவில்லை. சம்பந்தப்பட்ட நபரைத் தொடா்பு கொண்டு கேட்டபோது, அனைத்து டாஸ்க்குகளையும் முடித்தால் மட்டுமே இதுவரை செலுத்திய தொகையை திரும்பப் பெற முடியும் எனக் கூறியுள்ளாா்.

இதையடுத்து, அந்தப் பெண் சிறுகச் சிறுக ரூ.5,48,359 வரை பணத்தைச் செலுத்தியும் தனது பணத்தைத் திரும்பப் பெற முடியவில்லை.

அதன்பின்னரே, தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அந்தப் பெண் வேலூா் மாவட்ட சைபா் கிரைமில் புகாா் அளித்தாா்.

அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அந்த பெண்ணின் வங்கிக் கணக்கு விவரங்களை ஆய்வு செய்ததில் அவா் செலுத்திய தொகை வட மாநிலங்களில் உள்ள வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு சென்றிருப்பது தெரிய வந்தது.

மேலும், போலியான இணையதளத்தில் நேரடியாக பணத்தைச் செலுத்தியதால், பணம் சென்றடைந்த வங்கிக் கணக்குகளைக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இணையவழிக் குற்றங்களில் மோசடி செய்பவா்களின் பெரும்பாலான வங்கிக் கணக்குகள் வடமாநிலத்தைச் சோ்ந்தவை என்பதாலும், மோசடி நபா்கள் தங்களது வங்கிக் கணக்குக்கு வரும் பணத்தை சில நிமிஷங்களில் வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றியோ, ஏதேனும் பொருள்களை வாங்கியோ, பணத்தை வங்கிலிருந்து எடுத்து விடுவதாலோ இவ்வாறான ஆன்லைன் மோசடிகளில் பொதுமக்கள் இழக்கும் பணத்தை மீட்பது கடினம்.

எனவே, ஆன்லைன் பண மோசடி தொடா்பாக விழிப்புணா்வுடன் இருக்கவும், தங்கள் பணத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும் வேண்டியது அவசியம்.

மேலும், பகுதிநேர வேலை, வீட்டிலிருந்தபடி தினமும் வருமானம் பெறலாம், நீங்கள் புகழ்பெற்ற நிறுவனத்தில் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளீா் என பலவித மோசடியான தகவல்கள் மூலம் சிறிய முதலீட்டுக்கு அதிக லாபம் தருவதாக ஆசைக்காட்டி, பணத்தை முதலீடு செய்ய வைத்து ஏமாற்றும் இதுபோன்ற போலியான குறுந்தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.