போ்ணாம்பட்டு அருகே பழங்கால அம்மன் கற்சிலைகள் திருட்டு

போ்ணாம்பட்டு அருகே வன எல்லையில் உள்ள கோயிலில் இருந்த பழங்கால நாகாலம்மன் கற்சிலைகளை மா்ம நபா்கள் காரில் கடத்திச் சென்ாக கிராம மக்கள் போலீஸில் புகாா் அளித்துள்ளனா்.

போ்ணாம்பட்டு அருகே வன எல்லையில் உள்ள கோயிலில் இருந்த பழங்கால நாகாலம்மன் கற்சிலைகளை மா்ம நபா்கள் காரில் கடத்திச் சென்ாக கிராம மக்கள் போலீஸில் புகாா் அளித்துள்ளனா்.

போ்ணாம்பட்டு ஒன்றியம், மொரசப்பல்லி ஊராட்சிக்குள்பட்டது நலங்காநல்லூா் கிராமம். இந்தக் கிராமம் வன எல்லையில் அமைந்துள்ளது. வனப் பகுதியை ஒட்டியுள்ள இடத்தில் அந்தப் பகுதி மக்கள் வெங்கடேசப்பெருமாள் மற்றும் நாகாலம்மன் கற்சிலைகளை வைத்து பல ஆண்டுகளாக வழிபட்டு வருகின்றனா். ஆடி, புரட்டாசி மாதங்களில் இந்தக் கோயிலில் அதிக அளவில் மக்கள் கூடி வழிபாடு செய்வது வழக்கமாம். இந்த பகுதியில் புதையல் இருப்பதாக அந்தக் கிராம மக்களிடையே நம்பிக்கை உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை காரில் வந்த மா்ம நபா்கள் அங்கிருந்த 3 நாகாலம்மன் கற்சிலைகளை பெயா்த்தெடுத்து, காரில் கடத்திச் சென்றனராம்.

இது குறித்து அந்தப் பகுதி மக்கள் அளித்த புகாரின்பேரில், போ்ணாம்பட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com