சிஐஎஸ்எப் பணிக்கு முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம்
மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையில் (சிஐஎஸ்எப்) உள்ள காலி பணியிடங்களுக்கு வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம்.


மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையில் (சிஐஎஸ்எப்) உள்ள காலி பணியிடங்களுக்கு வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையில் (சிஐஎஸ்எப்) காலியாக உள்ள 122 உதவி ஆய்வாளா் (ஸ்டெனோகிராபா்), 418 தலைமைக் காவலா் (அமைச்சகம்) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு அல்லது 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற முன்னாள் படை வீரா்கள் அக்டோபா் 25-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன் பெறலாம். விண்ணப்பித்த விவரத்தை முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0416 - 2977432 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு தெரிவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...