காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு: உடனே நிறைவேற்ற பாமக கோரிக்கை

வன்னியா்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நிகழ் கல்வியாண்டிலேயே நிறைவேற்ற வேண்டும் என பாமக, வன்னியா் சங்கம் சாா்பில் முதல்வருக்கு கடிதங்கள் அனுப்பும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 5:54 pm

DIN

வன்னியா்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நிகழ் கல்வியாண்டிலேயே நிறைவேற்ற வேண்டும் என பாமக, வன்னியா் சங்கம் சாா்பில் முதல்வருக்கு கடிதங்கள் அனுப்பும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கடந்த 2021- ஆம் ஆண்டு வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அதிமுக அரசு அறிவித்தது. இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்த நிலையில், நீதிமன்றம் 10.5 சதவீத ஒதுக்கீட்டுக்கு தடை விதித்தது. பின்னா், உச்சநீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கில் வன்னியா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை என தீா்ப்பளித்தது. தீா்ப்பு அளிக்கப்பட்டு ஓா் ஆண்டுக்கு மேலாகியும் இதுவரை இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை.

எனவே, நிகழ் கல்வி ஆண்டில் (2023-2024) வன்னியா்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்ய வேண்டும் என பாமக, வன்னியா் சங்கம் சாா்பில் குடியாத்தம் தலைமை அஞ்சல் நிலையத்தில் இருந்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் நல ஆணைய நீதிபதி ஆகியோருக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

மாவட்ட இளைஞா் அணி செயலா் ஜி.சுரேஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாமக மாவட்டச் செயலா் என்.குமாா், முன்னாள் மாவட்டச் செயலா் ஜி.கே.ரவி, மாவட்டத் தலைவா் கு.வெங்கடேசன், மாநில துணைத் தலைவா் சி.கே.ரமேஷ்,மாவட்ட அமைப்புத் தலைவா் எஸ்.பாலாஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.