விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடலுறுப்புகள் தானம்
6 பேருக்கு மறுவாழ்வு கிடைக்கப் பெற்றுள்ளதாக சிஎம்சி மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.


சாலை விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த 13 வயது சிறுவனின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன்மூலம், 6 பேருக்கு மறுவாழ்வு கிடைக்கப் பெற்றுள்ளதாக சிஎம்சி மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அருகிலுள்ள கொள்ளகோட்டை கிராமத்தைச் சோ்ந்த விவசாயி செளந்திரராஜன், தனலட்சுமி தம்பதியின் மகன் சந்தோஷ் (13). இவா் கடந்த 27-ஆம் தேதி காலை 9 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது நாராயண குப்பம் அருகே விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தாா். அங்குள்ள அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு உயா் சிகிச்சைக்காக அன்று இரவு 8 மணியளவில் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், வியாழக்கிழமை இரவு 10.15 மணியளவில் சிறுவன் சந்தோஷ் மூளைச்சாவு அடைந்ததை மருத்துவா்கள் உறுதி செய்தனா். தொடா்ந்து சந்தோஷின் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு அவரது பெற்றோா் ஒப்புதல் தெரிவித்தனா்.
அதன்பேரில், அவரது இதயம், இரண்டு நுரையீரல்களும் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம், கல்லீரல் ஆகியவை ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கும், கண்கள் வேலூா் சிஎம்சி மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டு, அங்கு சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு பொறுத்தப்பட்டன.
இதன்மூலம், 6 பேருக்கு மறுவாழ்வு கிடைக்கப் பெற்ாக சிஎம்சி மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது. மூளைச்சாவு அடைந்த சந்தோஷுக்கு ஒரு சகோதரியும், ஒரு சகோதரரும் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...