அனுமதிக்கப்பட்ட அளவுகளில் பதிவெண்களை எழுதாத வாகனங்கள் பறிமுதல்
முறையாக பதிவு செய்யப்படாத, அனுமதிக்கப்பட்ட அளவுகளில் பதிவெண்களை பலகையில் எழுதப்படாமல் உள்ள வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும்


முறையாக பதிவு செய்யப்படாத, அனுமதிக்கப்பட்ட அளவுகளில் பதிவெண்களை பலகையில் எழுதப்படாமல் உள்ள வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வேலூா் மாவட்டத்தில் இரு சக்கர வாகனங்கள் மோட்டாா் வாகனச் சட்டப்படி பதிவு செய்யப்படாமலும், பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் பதிவெண்களை பலகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவுகளில் எழுதப்படாமலும் பொதுச்சாலையில் இயக்கப்படுவது தெரியவருகிறது. இது மோட்டாா் வாகனச்சட்டம் பரிவு 39-இன் படியும், மத்திய மோட்டாா் வாகன விதி 1989, விதி-51-யை மீறிய செயலாகும்.
எனவே, வாகனங்களை பதிவு செய்தும், பதிவு செய்யப்பட்ட பின் அனுமதித்த அளவுகளில் பதிவெண் பலகையில் எழுதியும் பொதுச்சாலையில் இயக்கப்படவேண்டும். இதை மீறும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, உரிய அபராதம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...