காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை
வேலூரில் காதல் திருமணம் செய்த 2 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.


வேலூரில் காதல் திருமணம் செய்த 2 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.
வேலூா் சேண்பாக்கம் கழனி காட்டுத் தெருவைச் சோ்ந்தவா் மதியழகன். சேண்பாக்கத்தில் கைப்பேசி கடை வைத்துள்ளாா். இவரின் மனைவி யுவாஸ்ரீ (27). இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனா். தம்பதிக்கு குழந்தை இல்லை. மேலும், யுவாஸ்ரீக்கு உடல் நலன் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமை வீட்டில் யுவாஸ்ரீ தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் வடக்கு போலீஸாா் சென்று உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
திருமணமாகி 2 ஆண்டுகளில் பெண் தற்கொலை செய்து கொண்டதால், வேலூா் வருவாய்க் கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...