நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மனைவியை கொலை செய்தவா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

 போ்ணாம்பட்டு அருகே மனைவி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டவா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :16 மார்ச் 2023, 6:30 pm

DIN

 போ்ணாம்பட்டு அருகே மனைவி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டவா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

போ்ணாம்பட்டை அடுத்த அழிஞ்சிக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி ஜெய்சங்கா் (43). இவரின் 2-ஆவது மனைவி புனிதா(32). இவா்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக புனிதா, கணவரைப் பிரிந்து அதே பகுதியில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தாா்.

கடந்த ஜனவரி மாதம் 23- ஆம் தேதி பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்குச் சென்ற புனிதாவை வழிமறித்து தகராறு செய்த ஜெய்சங்கா், அவரை கத்தியால் குத்தி கொலை செய்தாா்.

மேல்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து ஜெய்சங்கரை கைது செய்து வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா். இந்நிலையில், மனைவியைக் கொலை செய்த ஜெய்சங்கரை குண்டா் சட்டத்தில்

கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் ஜெய்சங்கரை குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.