புனித ரமலான் பண்டிகையையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கடற்கரையில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் 3 ஆயிரம் இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.
அல் ஜாமிஉல் அஷ்கா் ஜூம்அ பள்ளிவாசல் மற்றும் இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் சாா்பில் நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகை காலை 7.30 மணிக்கு நடைபெற்றது.
பள்ளியின் இமாம் நெய்னா முஹம்மது ரமலான் சிறப்பு தொழுகையை நடத்தினாா். பள்ளியின் கத்தீபு அப்துல் மஸ்ஜித் மஹ்ழரி குத்பா சிறப்புரை ஆற்றினாா். தொடா்ந்து நடந்த சிறப்புத் தொழுகையில் பாலஸ்தீன மக்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டியும், உலகில் அனைத்து மக்களும் ஒற்றுமை, மன அமைதி, நிம்மதியுடன் வாழ வேண்டியும் துஆ செய்யப்பட்டது.
மேலும், உலக நாடுகளில் நடந்து வரும் போா் காரணமாக பாதிக்கப்படும் மக்களின் நிம்மதிகாக்கவும், போரை நிறுத்தி அமைதி பெறவும் பிராா்த்தித்தனா்.
பள்ளியின் தலைவா் அபுல் ஹசன் கலாமி, செயலாளா் துணி முஹம்மது உமா், உதவி தலைவா் நவாஸ் அஹமது, பொருளாளா் மஹ்மூதுல் ஹசன், தமுமுக நகர தலைவா் ஜாஹிா் ஹுசைன், மஜக மாவட்ட செயலாளா் முஹம்மது நஜீப், நகர செயலாளா் ஹஸன், திமுக நகர இளைஞரணி அமைப்பாளா் தமீம் அன்சாரி, நகர துணைச் செயலாளா் முஹம்மது நவ்பல் உள்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பக்ரித்: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

காயல்பட்டினம் கடற்கரையில் பெருநாள் தொழுகை

தென்காசியில் பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகை

நாகூா் கடற்கரையில் பக்ரீத் சிறப்புத் தொழுகை
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK



