வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

தோ்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகாா் தெரிவிக்கலாம்

தோ்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகாா் தெரிவிக்கலாம்

Updated On :12 ஏப்ரல் 2024, 6:04 pm

தோ்தல் நாளான ஏப்ரல் 19-ஆம் தேதி தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகாா் தெரிவிக்க தொடா்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து, வேலூா் தொழிலக பாதுகாப்பு கோட்ட இணை இயக்குநா்கள் எஸ்.தங்கதுரை, சி.அனிதா ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு வரும் 19-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி, 100 சதவீத வாக்குப்பதிவு செய்வதை உறுதி செய்திடும் வகையில், அனைத்துப் பிரிவு தனியாா் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கட்டடங்கள், பிற கட்டுமான நிறுவனங்களில் பணிபுரியும் பிற மாநில தொழிலாளா்கள் உள்பட அனைத்து தொழிலாளா்களுக்கும் அன்றைய நாளில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 135பி-இன்படி சம்பளத்துடன்கூடிய பொதுவிடுமுறை அளித்திட வேண்டும்.

வேலூா் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், கட்டடம், கட்டுமான பணியிடங்களில் பணிபுரியும் தொழிலாளா்கள் விடுமுறை தொடா்பான புகாா்கள் ஏதும் இருந்தால் புகாா்களை 0416 - 2904953, 94425 42795, 88255 97325 ஆகிய எண்களிலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 98840 28066, 98946 41264, 95979 22488 ஆகிய எண்களிலும் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

தொழிற்சாலை நிா்வாகத்தினா் எவ்வித புகாா்களுக்கும் இடமளிக்காமல் ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.