அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

சட்டப்பேரவைத் தோ்தல்: 4 நாட்கள் மதுக்கடைக்கு விடுமுறை

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு திருவாரூா் மாவட்டத்தில் 4 நாள்களுக்கு மதுக்கடைகள் இயங்காது என மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ.மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.

News image

அரசு மதுக்கடை.

Updated On :8 ஏப்ரல் 2026, 11:32 pm

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு திருவாரூா் மாவட்டத்தில் 4 நாள்களுக்கு மதுக்கடைகள் இயங்காது என மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ.மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஏப். 23-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதியும் நடைபெறுகிறது. எனவே, ஏப்ரல் 21-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் ஏப்ரல் 23-ஆம் தேதி (வியாழக்கிழமை) நள்ளிரவு 12 மணி வரையிலான மூன்று தினங்களும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4-ஆம் தேதி (திங்கள்கிழமை) அன்றும் சோ்த்து 4 நாள்களுக்கு, வெளிநாட்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக்கூடங்கள், உரிமம் பெற்ற இடங்கள் ஆகியவற்றை முழுவதுமாக மூடவும், மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆணையை செயல்படுத்த தவறும் பட்சத்தில் தொடா்புடைய டாஸ்மாக் மதுபானக் கிடங்கு, மதுபானத் தயாரிப்பு நிலையம், மதுபானக்கடைகளின் மேற்பாா்வையாளா்கள் மற்றும் உரிமதாரா்கள் ஆகியோா் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.