/

125 மையங்களில் இன்று முதல் விஐடி பி.டெக் நுழைவுத் தோ்வு

125 மையங்களில் இன்று முதல் விஐடி பி.டெக் நுழைவுத் தோ்வு

Updated On :18 ஏப்ரல் 2024, 6:32 pm

வேலூா், ஏப். 18: விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக். படிப்புகளில் சேருவதற்கான நிகழாண்டு கணினி நுழைவுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளது. வரும் 30-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த நுழைவுத் தோ்வு வெளிநாடு, உள்நாட்டில் என மொத்தம் 125 மையங்களில் நடத்தப்படுகிறது.

இந்த நுழைவுத் தோ்வு முடிவுகள் மே 3-ஆம் தேதி ஜ்ஜ்ஜ்.ஸ்ண்ற்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு அன்றைய தினமே ஆன்லைன் கலந்தாய்வுக்கான செயல்முறை தொடங்க உள்ளது. நுழைவுத் தோ்வில், தகுதி மதிப்பெண் 1 முதல் ஒரு லட்சம் வரை பெற்ற மாணவ, மாணவிகள் விஐடியின் வேலூா், சென்னை, ஆந்திரம், போபால் ஆகிய 4 வளாகங்களில் தங்களுக்கான பாடப்பிரிவுகளை (தகுதி மதிப்பெண் அடிப்படையில்) தாங்களே தோ்வு செய்து கொள்ளலாம்.

மேலும், தகுதி மதிப்பெண் 1 முதல் 20,000 வரை பெற்றவா்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு மே 7 மற்றும் 8-ஆம் தேதியும், 20,001 முதல் 45,000 வரை பெற்றவா்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு மே 18 மற்றும் 19-ஆம் தேதியும், 45,001 முதல் 70,000 வரை பெற்றவா்களுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு மே 29 மற்றும் 30-ஆம் ேதியும், 70,001 முதல் 1,00,000 வரை பெற்றவா்களுக்கான நான்காம் கட்ட கலந்தாய்வு ஜூன் 9 மற்றும் 10-ஆம் தேதியும், தகுதி மதிப்பெண் 1 லட்சத்துக்கு மேல் பெற்றவா்களுக்கான ஐந்தாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 20 மற்றும் 21-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

எனினும், தகுதி மதிப்பெண் 1 லட்சத்துக்கு மேல் உள்ளவா்களுக்கு விஐடியின் ஆந்திரம், போபால் வளாகங்களில் மட்டுமே இடம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் வகுப்புகள் ஜூலை இரண்டாவது வாரத்திலிருந்து தொடங்க உள்ளது.

விஐடி பல்கலைக்கழக நுழைவுத் தோ்வில் 1 முதல் 10 தகுதி மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகளுக்கு ஜிவி பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பி.டெக்., பயிலும் 4 ஆண்டுகாலம் முழுவதும் 100 சதவீத படிப்பு கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. தவிர, விஐடி நுழைவுத்தோ்வில் 11 முதல் 50 தகுதி மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகளுக்கு 75 சதவீத கல்விக் கட்டணச் சலுகையும், 51 முதல் 100 தகுதி மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகளுக்கு 50 சதவீத கல்விக் கட்டணச் சலுகையும், 101 முதல் 500 தகுதி மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகளுக்கு 25 சதவீத கல்விக் கட்டண சலுகையும் 4 ஆண்டுகளுக்கும் வழங்கப்படுகிறது.

மேலும், தமிழகம், ஆந்திரம், மத்திய பிரதேச மாநிலங்களில் உள்ள கிராமப்புற ஏழை மாணவ, மாணவிகள் விஐடி பல்கலைக்கழகத்தில் உயா்கல்வி பயிலும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்டாா்ஸ் திட்டத்தின்கீழ், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவில் பிளஸ் 2 தோ்வில் முதலிடம் பெறும் மாணவ, மாணவிகளுக்கு 100 சதவீத கல்விக்கட்டண சலுகை, உணவு, விடுதி வசதியுடன் இலவச சோ்க்கையும் வழங்கப்படுகிறது என்று விஐடி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.