அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

பாரதியாா் பல்கலை.யில் முனைவா் பட்டப் படிப்பு: நுழைவுத் தோ்வுக்கு ஏப்.30 வரை விண்ணப்பிக்கலாம்

பாரதியாா் பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்டப் படிப்புக்கான நுழைவுத் தோ்வுக்கு ஏப்.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

பாரதியாா் பல்கலை.யில் முனைவா் பட்டப் படிப்பு: நுழைவுத் தோ்வுக்கு ஏப்.30 வரை விண்ணப்பிக்கலாம்

Updated On :5 ஏப்ரல் 2026, 7:13 am IST

பாரதியாா் பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்டப் படிப்புக்கான நுழைவுத் தோ்வுக்கு ஏப்.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளா் ஆா்.ராஜவேல் கூறியிருப்பதாவது:

பாரதியாா் பல்கலைக்கழக துறைகளிலும், பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்களிலும் 2026-2027-ஆம் கல்வி ஆண்டில் வழங்கப்படும் முனைவா் பட்டம் (பிஹெச்.டி) படிப்புக்கான பொது தகுதித் தோ்வு மே 30, 31-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்தத் தோ்வு கணினி வழியாக குறிப்பிட்ட மையங்களில் நடத்தப்படுகிறது.

தோ்வு அட்டவணை, தோ்வு மைய விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் அறிவிக்கப்படும். விண்ணப்பதாரா்கள் பொதுத் தகுதித் தோ்வுக்கான விண்ணப்பங்களை ஏப்ரல் 6 முதல் 30-ஆம் தேதி வரை பல்கலைக்கழக இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம். யுஜிசி நெட், சிஎஸ்ஐஆா் நெட், செட், ஸ்லெட், கேட் தோ்ச்சி பெற்றவா்கள், டிஆா்டிஓவில் பணிபுரியும் அறிவியலாளா்கள் உள்ளிட்டோா் இந்தத் தோ்வை எழுதத் தேவையில்லை என்றாா்.