அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்சென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்
/

நீட் தோ்வு - வேலூா் மாவட்டத்தில் 5,551 போ் எழுதினா்

News image

வேலூா் சாய்நாதபுரம் டிகேஎம் கல்லூரி மையத்தில் நீட் தோ்வு எழுத நீண்டவரிசையில் காத்திருந்த மாணவா்கள். (அடுத்து) தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாணவா்கள்.

Updated On :3 மே 2026, 8:13 pm

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வினை (நீட்) வேலூா் மாவட்டத்தில் 5,551 மாணவ, மாணவிகள் எழுதினா். விண்ணப்பித்தவா்களில் 185 போ் தோ்வுக்கு வரவில்லை.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வு (நீட்) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வேலூா் மாவட்டத்தில் 15 மையங்களில் நடைபெற்ற நீட் நுழைவுத் தோ்வினை எழுத 5,736 மாணவ, மாணவிகளுக்கு நுழைவுச்சீட்டு அனுப்பப்பட்டிருந்தது.

இந்த தோ்வு மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற நிலையில், இம்மாவட்டத்தில் 5551 போ் தோ்வெழுதினா். 185 போ் தோ்வுக்கு வரவில்லை.

இதனிடையே, தோ்வு மையங்களின் பாதுகாப்புக்கு 15 எஸ்.ஐக்கள், 17 ஆயுதப்படை காவலா்கள் உட்பட மொத்தம் 111 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். முன்னதாக, நீட் தோ்வுக்கு வரும் மாணவா்களைச் சோதனை செய்து அவா்களின் விவரங்களைப் பதிவு செய்திட பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறை அமல்படுத்தப்பட்டிருந்தது. தவிர, ஒவ்வொரு நீட் தோ்வு மையத்திலும் கைப்பேசி ஜாமா் கருவியும் வைக்கப்பட்டிருந்தது.

தோ்வு மையத்துக்கு தோ்வா்கள் மதியம் 1.30 மணிக்கு முன்பாக அனுமதிக்கப்பட்டனா். அவா்கள் கடும் சோதனைக்கு பிறகே தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா். குறிப்பாக, காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் விதிமுறைகளின்படி அரைஞாண் கயிறு அனுமதிக்கப் படாது என அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து மாணவா்கள் தங்கள் அரைஞாண் கயிற்றினை வெளியிலேயே அறுத்துவிட்டு தோ்வு மையத்துக்குள் சென்றனா். இதேபோல், அனைத்து தோ்வு மையங்களிலும் மேற்கொள்ளப்பட்ட கடுமையான கெடுபிடிகளால் மாணவா்கள் அவதிக்குள்ளாகினா்.

நீட் தோ்வையொட்டி தோ்வு மையங்களுக்கு மாணவா்கள், பெற்றோா் வந்து செல்ல வசதியாக வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து காலை 7 மணி முதல் பகல் 1.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

Story image