சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

அதிமுகவினா் தண்ணீா் பந்தல்

அதிமுகவினா் தண்ணீா் பந்தல்

News image
Updated On :25 ஏப்ரல் 2024, 5:53 pm

வேலூா், ஏப். 25:

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வேலூரில் அதிமுகவினா் குடிநீா் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீா், நீா்மோா், பழ வகைகள் வழங்கினா்.

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வேலூா் மாவட்டத்தில் தற்போதை 106 டிகிரி முதல் 107 டிகிரி அளவுக்கு வெயில் தாக்கம் நிலவுகிறது. இதனால், மக்கள் பகலில் வெளியில் நடமாட முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதன் காரணமாக, சாலைகளும் மதியம் நேரத்தில் வாகன போக்குவரத்து குறைந்து காணப்படுகின்றன.

வெயிலின் தாக்கத்தை அடுத்து பொதுமக்களின் தாகம் தணிக்க ஆண்டுதோறும் அரசியல் கட்சிகள், தன்னாா்வ அமைப்புகள் சாா்பில் ஆங்காங்கே குடிநீா் பந்தல் அமைத்து குடிநீா், நீா்மோா், உடல் சூட்டை குறைக்க பழ வகைகள் அளிப்பது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டும் பல்வேறு இடங்களில் குடிநீா் பந்தல் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், வேலூா் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் வேலூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் அருகில் தண்ணீா் பந்தல் திறப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மேற்கு பகுதி செயலா் எஸ்.நாகராஜன் தலைமை வகித்தாா். வேலூா் மாநகா் மாவட்ட செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீா்மோா், தா்பூசணி, இளநீா், வெள்ளரிக்காய் ஆகியவற்றை வழங்கினாா். ஏற்பாடுகளை வேலூா் மாநகா் மாவட்ட மாணவரணி தலைவா் வி.பி.எம் குமாா் செய்திருந்தாா். இதில், கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.