பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

குடியாத்தம் அருகே சிறுத்தை நடமாட்டம்

News image
Updated On :28 டிசம்பர் 2024, 6:23 pm

Din

குடியாத்தம் அருகே வன எல்லையில் சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத் துறையினா் நேரில் சென்று விசாரணை நடத்தினா்.

குடியாத்தத்தை அடுத்த எா்த்தாங்கல் கிராமத்தையொட்டி, வன எல்லையில் பட்டணத்துமலை என்ற மலை அமைந்துள்ளது. அங்குள்ள நிலத்தில் அதே கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பரந்தாமன் மாடு மேய்த்துக் கொண்டிருந்தாராம். அந்த வழியே சிறுத்தை வந்ததாம். அப்போது பரந்தாமன் தான் வைத்திருந்த குடையை விரித்துக் காட்டினாராம். இதையடுத்து சிறுத்தை ஓடி விட்டதாம்.

இதுகுறித்த தகவலின்பேரில், போ்ணாம்பட்டு வனத் துறையினா், வருவாய்த் துறையினா் அங்கு சென்று விசாரணை நடத்தினா்.