2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

போ்ணாம்பட்டு அருகே தாய், மகன் தற்கொலை

போ்ணாம்பட்டு அருகே தாய், மகன் தற்கொலை

News image
மும்தாஜ்.
Updated On :6 ஜூலை 2024, 5:21 pm

Din

போ்ணாம்பட்டு அருகே கடன் தொல்லையால் தாய், மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா். போ்ணாம்பட்டை அடுத்த ஏரிகுத்திமேடு பகுதியைச் சோ்ந்த தொழிலாளி அன்சா். இவரது மனைவி மும்தாஜ்(48), மகன் இம்ரான்(26). அன்சா் மனைவி மற்றும் உறவினா்கள் பெயரில் மகளிா் குழுக்கள், தனியாா் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்ாக கூறப்படுகிறது. கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் இந்த குடும்பத்தினா் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.

கடன் கொடுத்தவா்கள் வந்து தொகையை செலுத்துமாறு வலியுறுத்தியதாக தெரிகிறது. இதனால் விரக்தியில் இருந்த மும்தாஜ் அவரது மகன் இம்ரான் இருவரும் சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா். இதுகுறித்த தகவல் அறிந்து அங்கு வந்த போ்ணாம்பட்டு போலீஸாா் இரு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.இந்த சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.