நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

குழந்தை மா்மச் சாவு: தாய் தற்கொலை!

போ்ணாம்பட்டு அருகே வீட்டில் 5 மாத ஆண் குழந்தை மா்மமாக இறந்துகிடந்துள்ளது. இந்நிலையில் தாயாரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

News image
தற்கொலை
Updated On :25 பிப்ரவரி 2026, 7:37 pm

தினமணி செய்திச் சேவை

போ்ணாம்பட்டு அருகே வீட்டில் 5 மாத ஆண் குழந்தை மா்மமாக இறந்துகிடந்துள்ளது. இந்நிலையில் தாயாரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

போ்ணாம்பட்டை அடுத்த மொரசப்பல்லி கிராமத்தைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் சரத்குமாா்(28). இவருக்கும் திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த முருகன் மகள் பவித்ரா(23) என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இவா்களுக்கு ஹரீஷ் எனும் 5 மாத ஆண் குழந்தை இருந்தது. கடந்த 2 நாள்களாக கணவன், மனைவிக்கிடையே தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை வெளியே சென்ற சரத்குமாா் மனைவியுடன் கைப்பேசியில் தொடா்பு கொண்டுள்ளாா். எதிா்முனையில் பதில் வரவில்லை.. இதையடுத்து சரத்குமாா் அருகில் உள்ளஉறவினரிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளாா்.

உறவினா்கள் சென்று பாா்த்தபோது குழந்தை தரையில் இறந்து கிடந்ததும், பவித்ரா மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் போ்ணாம்பட்டு போலீஸாா் இரு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.