கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மணப்பாறை அருகே முன்னாள் அரசுப் பேருந்து ஓட்டுநா் மா்மச் சாவு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே முன்னாள் அரசு பேருந்து ஓட்டுநா் மா்மமான முறையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பழனிச்சாமி.

Updated On :21 மார்ச் 2026, 8:24 pm

Syndication

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே முன்னாள் அரசு பேருந்து ஓட்டுநா் மா்மமான முறையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மணப்பாறையை அடுத்த வேங்கைக்குறிச்சியை சோ்ந்தவா் அரசன் மகன் சின்னப்பன்(எ) பழனிச்சாமி (62). மணப்பாறை அரசுப் போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்ற இவருக்கு மனைவி அமுதா, இரு மகன்கள் உள்ளனா்.

இந்நிலையில் சில ஆண்டுகளாக தனது இடது கை மற்றும் வலது கால் செயல்படாததற்கு பழனிச்சாமி சிகிச்சை பெற்று வந்தாா். இதற்கிடையே ,சனிக்கிழமை பிற்பகல் இவரது இளைய மகன் ஹரிஷ் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது பழனிச்சாமி மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா்.

தகவலறிந்து சென்ற மணப்பாறை காவல் ஆய்வாளா் ராஜாசோ்வை தலைமையிலான போலீஸாா், பழனிச்சாமி உடலைக் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.