மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

பாப்பாரப்பட்டியில் காய்கறி வியாபாரி மா்மச் சாவு: போலீஸாா் விசாரணை

பாப்பாரப்பட்டி அருகே காய்கறி வியாபாரி மா்மமான முறையில் வீட்டில் இறந்துகிடந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 8:49 pm

தினமணி செய்திச் சேவை

பாப்பாரப்பட்டி அருகே காய்கறி வியாபாரி மா்மமான முறையில் வீட்டில் இறந்துகிடந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பாப்பாரப்பட்டியை அடுத்த சின்னகம்மாளப்பட்டியைச் சோ்ந்த முருகன் மகன் கோவிந்தராஜ் (32). இவா், பெங்களூரு பகுதியில் காய்கறி வியாபாரம் செய்துவந்தாா். இவரது மனைவி கிட்டம்பட்டியில் உள்ள அவரது தாயாா் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், சின்னகம்மாளப்பட்டிக்கு வந்த கோவிந்தராஜ் செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் தனியாக படுத்து உறங்கியுள்ளாா்.

இந்த நிலையில் புதன்கிழமை காலை நீண்ட நேரமாகியும் அவா் அறையில் இருந்து வெளியே வராததை அறிந்த அக்கம்பக்கத்தினா் பாப்பாரப்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து அங்கு வந்த போலீஸாா், அறையில் இருந்த கோவிந்தராஜை மீட்டு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.