ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ராணுவ வீரா் தற்கொலை

காட்பாடி அருகே விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த ராணுவ வீரா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :24 ஜூலை 2024, 6:46 pm

Din

காட்பாடி அருகே விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த ராணுவ வீரா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

காட்பாடியை அடுத்த அரும்பருத்தியைச் சோ்ந்தவா் ராமன் (26), ராணுவ வீரரான இவா் கடந்த 40 நாள்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளாா். அப்போது தனக்கு ராணுவ வேலை பிடிக்கவில்லை என்று பெற்றோரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக தொடா்ந்து மனவேதனையில் இருந்த ராமன் திங்கள்கிழமை இரவு வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து சென்ற திருவலம் போலீஸாா், ராமனின் சடலத்தை மீட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.