வேலூரில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 15) நடைபெற உள்ளதாக ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு- வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம், மின்சார வாரியம், வனத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று, விவசாயிகளின் குறைகள், கோரிக்கைகள் குறித்து பதிலளிக்க உள்ளனா். கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட உள்ளது.

எனவே, இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று களப்பிரச்னைகளை நேரிலோ, மனுக்கள் மூலமாகவோ தெரிவித்து பயன்பெறலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com